கோயம்புத்தூர்: பொள்ளாச்சி வால்பாறை சாலையில் குறுக்கே தடுப்புச் சுவர் உள்ளதால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் வால்பாறை சாலை வருவதற்கு குறுக்குச்சாலைப் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல்துறையினர் விபத்து விசாரணை செய்தது வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும்' - இலங்கை எம்பி செந்தில் தொண்டைமான்