ETV Bharat / state

கோவையில் சாமியார் வீட்டில் 200 கிலோ ஐம்பொன் சிலை பறிமுதல்!

author img

By

Published : Nov 4, 2022, 8:36 PM IST

கோவையில் பாஸ்கர சுவாமிகள் என்பவர் வீட்டில் சிலை தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டதில் 4 அடி உயரமுள்ள 200 கிலோ ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையில் சாமியார் வீட்டில் 200 கிலோ ஜம்பொன் சிலை பறிமுதல்

கோவை: புட்டுவிக்கி பகுதியில் பாஸ்கர சுவாமிகள் என்பவர் இல்லத்தில் நான்கு அடி ஐம்பொன் முருகர் சிலை வைத்துள்ளது தொடர்பாக கிடைத்த தகவலின்பேரில் சிலை தடுப்புப்பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் 3 மணி நேரமாக சிலை தடுப்புப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்ட விசாரணையில், பாஸ்கர சுவாமிகளே சிலையைத்தயாரிப்பதாக சிலை தடுப்பு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சிலை தயாரிப்பது போன்ற வீடியோக்களையும் சிலை தடுப்பு அலுவலர்களிடம் தயாரித்ததற்குச் சான்றாக காண்பித்துள்ளார். இருப்பினும் சிலை தடுப்புப்பிரிவு போலீசார் ஆவணங்கள் தொடர்பாக வேறு ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் சாமியார் வீட்டில் 200 கிலோ ஐம்பொன் சிலை பறிமுதல்!

அதேசமயம் உரிய ஆவணங்கள் இன்றி 4 அடி உயரம் 200 கிலோ எடையுள்ள முருகன் சிலை வைத்திருந்ததால் சிலை தடுப்புப்பிரிவு போலீசார் அச்சிலையை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வடகிழக்கு பருவ மழை: கோவையில் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.