கோவை ரயில் நிலையற்கு வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அங்கு வாகன நிறுத்துமிடத்தில் வாகன பாதுகாப்பு எவ்வாறு உள்ளது. அங்கு கட்டணங்கள் எவ்வாறு வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து பொதுமக்களிடமும், அரசு அலுவலர்களிடமும் கேட்டறிந்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய டிராப்பிக் ராமசாமி, கோவை ரயில் நிலையத்தில் எந்தவித அறிவிப்பு பலகை இன்றி வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாக அவருக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு நபர் ஆதாரத்துடன் தகவல் அளித்ததாகவும், அதை சோதனைச் செய்யவே கோவை ரயில் நிலையம் வந்ததாக தெரிவித்தார்.
ரயில் நிலையங்களில் இலவசமாக வாகனங்களை பார்த்து கொள்ள வேண்டும் என்றும், இதை பற்றி அரசிடம் பேச உள்ளதாகவும் கூறினார். பின்னர், பேனர் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கூறிய உத்தரவை தெரியாது என்று முதலமைச்சர் கூறியது, அவர் முதலமைச்சர் பதவிக்கே தகுதியற்றவர் என்பதை காட்டுகின்றது என்றார்.
இதையும் படிங்க: விபத்து நடந்த இடத்தில் கொடிக்கம்பம் இல்லை: நீதிமன்றத்தில் அரசு தகவல்!