கோவை, மேட்டுப்பாளையம் வழியாக பவானி ஆறு ஓடுகிறது. பில்லூர் அணை நிரம்பும் வேளையில், அவ்வப்போது அதிகப்படியான தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் அருகே, பவானி ஆற்றில் நீர் வரத்து குறைவாக இருந்த காரணத்தால் சுற்றுலாப்பயணிகள் 50க்கும் மேற்பட்டோர் ஆற்றின் நடுப்பகுதியில் மேடாக இருந்த பகுதிக்குச் சென்று, சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பவானி ஆற்றில், அதிகப்படியான தண்ணீர் ஓடியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 50க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் ஆற்றின் நடுவிலேயே மாட்டிக்கொண்டனர்.
தகவலறிந்து, அங்கு விரைந்த காவல் துறையினரும், தீயணைப்பு துறையினரும் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர்களுடன் இரண்டு குழந்தைகளும் ஆற்றின் நடுவே சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தற்போது அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.
இதையும் படிங்க: