ETV Bharat / state

கோவையில் எல். முருகன் வாக்குச் சேகரிப்பு! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவையில் பரப்புரை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பரப்புரை மேற்கொண்டார்.

கோவையில் எல்.முருகன் வாக்குச் சேகரிப்பு
கோவையில் எல்.முருகன் வாக்குச் சேகரிப்பு
author img

By

Published : Feb 13, 2022, 6:07 PM IST

கோயம்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (பிப்ரவரி13) கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எல். முருகன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதைத் தொடர்ந்து அவினாசி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் எல். முருகன் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சிறப்பான பட்ஜெட் (வரவு செலவுத் திட்ட அறிக்கை) தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பான வரவு செலவுத் திட்ட அறிக்கைத் தாக்கல்செய்தற்குத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி. இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டிக்குத் தேவையானதைக் கொண்டு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்-முசிறி 4 வழிச்சாலை

விமான நிலையம், துறைமுகம், நீர்வழிச் சாலை உள்பட போக்குவரத்திற்கான ஏழு கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையாக இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் நாமக்கல்-முசிறி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. ரயில் மூலம் விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களைக் கொண்டுசெல்லவும், சிறு குறு தொழில்களின் பொருள்களைக் கொண்டுசெல்லவும் 'ஒன் ஸ்டேஷன் -ஒன் புராடக்ட்' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் எல். முருகன் வாக்குச் சேகரிப்பு

வேளாண்மையை இரட்டிப்பாக்கும்விதமாக இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கை உள்ளது. தொழில்முனைவோர்களும், வல்லுநர்களும்கூட இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கையை வரவேற்றிருக்கின்றனர். கோதாவரி பொன்னாறு காவேரி இணைப்புத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்குப் பாசன வசதி விரிவாக்கம் செய்யப்படும். இதனால் மக்களின் குடிநீர்ப் பிரச்சினை தீரும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

மத்திய அரசு நிதியில் கோவையில் மேம்பாலங்கள் கட்டும் பணிகள்

கரோனாவால் கல்வி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பி.எம் இ-வித்யா என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 200 சேனல்கள் மூலம் தரமான கல்வி பயிற்றுவிக்கப்படும். டிஜிட்டல் பல்கலைக்கழகம், டெலி மெடிசன்ஸ், அனைவருக்கும் வீடு திட்டம் போன்றவைகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பி.எம். கதிசக்தி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் ஏழு முக்கியத் துறைகள் உள்ளன. கோவையில் கட்டப்பட்டுவரும் மேம்பாலங்கள் அனைத்தும் மத்திய அரசின் நிதி உதவியுடன் நடைபெற்றுவருகிறது" எனக் கூறினார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: அதிமுக பேனர் கிழிப்பு: திண்டுக்கல்லில் பரபரப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.