கோவை மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்தவர் சந்திரன். இவர் மோட்டர் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து வருகிறார்.
நேற்று காலை சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் உதிரி பாகங்களை தனது காரில் எடுத்துகொண்டு கேரளாவை நோக்கி சென்றுள்ளார்.
அப்போது, தமிழ்நாடு- கேரளா எல்லையான வாளையார் அருகே சந்திரனின் கார் சென்ற கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர், கார்களை வழிமறித்தனர்.
பின்னர் உடனடியாக காரிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள், சந்திரன் மற்றும் ஓட்டுநர் லோகநாதனை தாக்கி விட்டு காரை மோட்டார் உதிரி பாகங்களுடன் திருடிச் சென்றனர்.
இது குறித்து உடனடியாக காவலர்களுக்கு சந்திரன் அளித்த தகவலின் பேரில், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், டி.எஸ்.பி. வேல்முருகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், பத்து பேர் கொண்ட மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றாவாளிகளை விரைந்து பிடிக்கவும் சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மளிகைக்கடை பூட்டை உடைத்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை