மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கைது! - போக்சோ சட்டம்
கோயம்புத்தூர்: 14 வயது மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் காரமடை பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (26). இவர் அதே பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனையடுத்து அந்தச் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவரது பெற்றோரிடம் மருத்துவர்கள் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அதனை கலைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் நடந்ததை அழுதுகொண்டே கூறினார்.
இதையடுத்து இருவீட்டாரும் பேசி, வருகிற 21ஆம் தேதி திருமணத்துக்கு முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தகவல் வெளியாகி, சிவலிங்கத்தை காவலர்கள் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைந்தனர்.