ETV Bharat / state

மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம்: தமிழ்நாடு அரசைக் கண்டித்து விரைவில் போராட்டம் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ! - KADAMPUR RAJU

மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தை வேண்டாம் எனக் கூறிய தமிழ்நாடு அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏவுமான கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2025, 12:50 PM IST

Updated : Jan 13, 2025, 1:15 PM IST

கோவில்பட்டி: அதிமுக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

அதிமுக ஆட்சிக்காலத்தில் பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்படமால் இருந்தால் அனைத்து தீப்பெட்டி தொழிலாளர்களையும் நல வாரியத்தில் இணைத்து இருப்போம், ஆனால் திமுக அரசு அதை செய்யவில்லை, அதற்கு என்று அதிகாரிகள் உள்ளனர். ஆனால் கணக்கெடுப்பு செய்து தீப்பெட்டி தொழிலாளர்களை நலவாரியத்தில் இணைக்க வேண்டும். இனியும் அரசு மொத்தனபோக்காக இல்லமால் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தில் தொழிலாளர்களை சேர்க்க வேண்டும்.

மதுரை - தூத்துக்குடி இடையே ரெயில் திட்டம் கடந்த 2011 -12ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சியினால் கொண்டு வரப்பட்டது. ரூ.2054 கோடி மதிப்பீட்டில் 143 கிலோ மீட்டர் தொலைவிற்கு திட்டம் தொடங்கப்பட்டது. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கு அதிமுக ஆட்சியில் நிலம் எடுத்து கொடுக்கப்பட்டது போல மதுரை - தூத்துக்குடி இடையிலான ரயில் திட்டத்திற்கும் 18 கிலோ மீட்டர் தூரம் நிலம் எடுப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து பணிகள் நடைபெற்று சோதனை ஓட்டமும் நடைபெற்றது. அதன் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நில எடுப்பு பணிக்காக விளத்திகுளம், திருப்பரங்குன்றத்தில் அலுவலகங்கள் திறக்கப்பட்டது தவிர நில எடுப்பு பணிகள் நடைபெறவில்லை. இந்த நிலையில் தமிழக அரசிடம் கடிதம் வந்த காரணத்தினால் மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்தினை கைவிட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜூவுக்கு நன்றி தெரிவித்த தீப்பெட்டி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் (ETV Bharat Tamilnadu)

இந்த தகவல் கேட்டு அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். பல ஆண்டுகள் கனவு திட்டமான இந்த திட்டம் நிறைவேறினால் தங்கள் ரயிலில் பயணிக்கலாம் என்ற எண்ணத்தில் மக்கள் இருந்தனர். இதில் யார் அரசியல் செய்தாலும் கண்டிக்கதக்கது. மத்திய அரசினை குறைசொல்லி திமுக தப்பித்துக்கொள்ள கூடாது. கடந்த 2 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று என்ன செய்தார்கள். இந்த திட்டத்தினை கைவிட வேண்டும் என்று மாநில அரசு கூறினால் விளாத்திகுளம், திருப்பரங்குன்றத்தில் அலுவலகங்களை மூடியது ஏன் என்று அமைச்சர் கீதாஜீவன் விளக்கம் தர வேண்டும். இந்த பிரச்னை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசனை நடத்தி அதிமுக சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

அண்ணா பல்கலைகழக விவகாரத்தினை திசை திருப்பவே ஆளுநரை கண்டித்து திமுக போராட்டம் நடத்தியுள்ளது. இந்த போராட்டத்தினை குறைந்தபட்சம் ஆளுநர் மாளிகை முன்பு நடந்த வேண்டியது தானே? .'யார் அந்த சார்? என்று கேட்டால் முதல்வர், அமைச்சர்கள் அச்சம் கொள்கின்றனர் . அதற்கு விடை கிடைக்கும் வரை அதிமுக போராடும். இதனை சொன்னால் பொள்ளாச்சி சம்பத்தினை கூறுகின்றனர். பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுக அரசு சரியாக நடவடிக்கை எடுத்த காரணத்தினால் தான் அதிமுக அங்கு மீண்டும் வெற்றி பெற்றது.

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடைபெறுவதில்லை. இதற்கு திருமங்கலம் பார்முலா உதாரணம். இப்போது ஈரோடு கிழக்கு பார்முலா என கூறுகின்றனர். அந்த தொகுதியில் ஒரு இடத்தில் வாக்காளர்களை அடைத்து வைத்து, மாலையில் வீட்டுக்கு செல்லும் போது தினமும் பணம் கொடுத்து, அங்கு வரவில்லையென்றால் உங்களுக்குரிய உரிமைகள் ரத்து செய்யப்படும் என கருத்தை மக்கள் கூறினர். இதற்கு எதிர்கட்சி தலைவர் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்த யுக்தியை மக்கள் சுற்றுலா அழைத்துச் சென்று, அங்கிருந்து நேரடியாக வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வந்தனர். இப்படி செய்து தான் கடந்த இடைத்தேர்தலில் அங்கு வெற்றி பெற்றனர். இந்த சூழ்நிலையில் நாங்கள் போட்டியிட்டால் அங்குள்ள மக்கள் துன்படுத்துவார்கள். அங்குள்ள மக்களின் நலன் கருதி தான் அதிமுக போட்டியிடவில்லை. இரட்டை இலை சின்னம் அதிமுகவுடன் தான், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் உள்ளது.

இவ்வாறு கடம்பூர் ராஜூ கூறினார்.

Last Updated : Jan 13, 2025, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.