ETV Bharat / state

'அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை ஒரு மாதத்திற்குள் அரசு முடிக்க வேண்டும்'!- எச்சரித்த பாஜக விவசாய அணி - ஜனவரி மாதம் முடிக்கப்பட வேண்டிய திட்டம்

’அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஒரு மாதத்திற்குள் தமிழ்நாடு அரசு முடிக்க வேண்டும். இல்லையென்றால் சென்னை சென்று கோட்டையை முற்றுகையிடுவோம்’ என பாஜக விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே. நாகராஜ் பேட்டியளித்துள்ளார்.

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் ஒரு மாதத்திற்குள் அரசு முடிக்க வேண்டும்- ஜி.கே. நாகராஜ் பேட்டி!

author img

By

Published : Aug 11, 2022, 10:19 PM IST

கோவை: பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக விவசாயி அணித் தலைவர் ஜி.கே. நாகராஜ்: ’1,856 கோடி மதிப்பில் 3 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டம் தற்பொழுது மிக மோசமான நிலையில் கேட்பாரற்று புறக்கணிக்கப்பட்டுக்கிடக்கிறது. இத்திட்டத்தினால் கோவையில் உள்ள 2000 குளம், குட்டைகள் பயன்பெறும். இதில் இன்னும் 800 குட்டைகளை இணைக்க வேண்டி உள்ளது.

கரோனா காலத்திலும் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்திற்குத் தடையில்லாமல் பணிகள் மேற்கொண்டார். இத்திட்டம் 2021 ஜனவரி மாதம் முடிக்கப்பட வேண்டிய திட்டம். ஆனால், திமுக அரசு பதவி ஏற்ற பிறகு, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2.2 கிமீ பைப் லைன் போடாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.

திமுகவின் திட்டமிட்ட தூண்டுதலால் சிலர் அப்பகுதியில் பைப்லைன் போடவிடாமல் தடுத்து வருகின்றனர். திமுக ஆட்சி வந்த பிறகுதான் பைப் லைன் போடுவதற்கு சில விவசாயிகள் வேண்டுமென்றே திட்டத்தை நிறுத்த அதிக இழப்பீடு கேட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியும் எவ்விதப்பதிலும் இல்லை. இத்திட்டத்தை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றவில்லை என்றால், செப்டம்பர் மாத இறுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றிணைத்து அத்திக்கடவு - அவினாசி திட்ட அலுவலகத்தை முற்றுகை இடுவோம்.

ஆயிரம் வாகனங்களோடு சென்னையை நோக்கி கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தையும் மேற்கொள்ள உள்ளோம். பணிகளை முடிப்பதற்கு அரசு அலுவலர்கள் தயாராக உள்ளனர். அரசு தான் தாமதப்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தை தாமதப்படுத்தி மீண்டும் இத்திட்டத்தின் மதிப்பு அதிகரித்து, அதன் மூலம் திமுக லாபம் எடுக்கத் துடிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த முன்னெடுப்பு இல்லை. சில திட்டங்களை செயல்படுத்தும்போது தமிழ்நாடு அரசு செய்வது போல் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை திமுக அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்த உடன், மத்திய அரசின் திட்டங்களும் முழுமையாக வந்து சேரும்’ எனத் தெரிவித்தார்.

'அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை ஒரு மாதத்திற்குள் அரசு முடிக்க வேண்டும்'!- எச்சரித்த பாஜக விவசாய அணி

செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ’மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்துக் கட்சிக் கூட்டங்களை கூட்டியபோது 10 நாட்களுக்குள் கோவை மாநகரில் உள்ள அனைத்து போஸ்டர்களும் எடுக்கப்பட வேண்டும் எனத்தெரிவித்தார். ஆனால், திமுகவினர் மட்டும் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இது குறித்த மாவட்ட ஆட்சியரிடமும் தெரிவித்துள்ளோம்.

உயர் நீதிமன்ற ஆணையைக் கொண்டு கோயிலை மட்டும் இடிக்கக்கூடிய இந்த அரசு... ஏன்? இந்த போஸ்டர் விவகாரத்தில் அதனைப்பின்பற்றவில்லை?. நேற்று பாஜக சார்பில் சுதந்திர தின விழா குறித்து போஸ்டர்கள் ஒட்டச்சென்ற பொழுது திமுகவினர் அராஜகமாக நடந்து கொண்டனர். அவர்கள் மீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்குத்தொடர வேண்டும் என பீளமேடு காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளோம்.

இன்று இரவிற்குள் மாவட்ட நிர்வாகம் அனைத்து போஸ்டர்களையும் அகற்றவில்லை என்றால், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பாஜகவினர் அனைத்து போஸ்டர்களையும் அகற்றுவோம். மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாளை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தொடர உள்ளோம்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'நீயும் வரக்கூடாது; நானும் வரமாட்டேன்'- வடிவேலுவின் படத்துடன் விழிப்புணர்வு போஸ்டர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.