ETV Bharat / state

'வேலைக்கு தகுந்த கூலி இல்லை' - விசைத்தறி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு! - reduce wages

கோவை: விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஏற்கனவே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தைவிட ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைவான கூலி வழங்குவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விசைத்தறி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வேலைக்கு தகுந்த கூலி இல்லை - விசைத்தறி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு
author img

By

Published : Jun 8, 2019, 10:40 PM IST

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றது. இந்த தொழிலை நம்பி சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர். விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து நூலினை பெற்று, காடா துணியாக நெய்து கொடுக்கின்றனர். இவர்களுக்கு துணியின் ரகத்திற்கு ஏற்ப ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி தருவது வழக்கம்.

இந்நிலையில் கூலி வழங்குவதில் விசைத்தறி உரிமையாளர்களுக்கும், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து, கடந்த 2014ஆம் ஆண்டு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையே கூலி ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் இந்த ஒப்பந்தம் போடப்பட்டு 5 ஆண்டுகளாகியும், ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்தம்படி கூலி வழங்காமல் குறைத்து வழங்கி வந்தனர். இந்நிலையில் தற்போது அதற்கும் குறைவான கூலியை ஜவுளி உரிமையாளர்கள் வழங்கி வருவதாக கூலிக்கு நெசவு தொழிலில் செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அரசுக்கு இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வேலைக்கு தகுந்த கூலி இல்லை - விசைத்தறி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

இதுகுறித்து மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி கூறுகையில், "தொழில் முடக்கம் ஏற்பட்டால் உற்பத்தி குறைப்பு செய்வதற்கு பதிலாக, ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி குறைப்பு செய்திருப்பதை ஏற்க முடியாது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.

சு.சீனிவாசன்.       கோவை

கோவை மாவட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்களுக்கு 5 ஆண்டுகளாக ஒப்பந்தத்தை விட குறைவாக கூலி வழங்கி வந்த ஜவுளி உற்பத்தியாளர்கள், மேலும் கூலி குறைப்பு செய்துள்ளதால் விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலை நம்பி சுமார் 3 இலட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து நூலினை பெற்று, காடா துணியாக நெய்து விசைத்தறி உரிமையாளர்கள் தருகின்றனர். அதில் கூலிக்கு நெசவு செய்து தரும் விசைத்தறி உரிமையாளர்களே அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு துணி இரகத்திற்கு ஏற்ப ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி தருவது வழக்கம். கடந்த 2014 ம் ஆண்டு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையே கூலி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகளாகியும் ஒப்பந்தப்படி முறையாக ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி வழங்காமல் குறைத்து வழங்கி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நூல் விலை உயர்வை காரணம்காட்டி, மேலும் கூலி குறைப்பை ஜவுளி உற்பத்தியாளர்கள் செய்துள்ளனர். உதாரணமாக ஒரு மீட்டர் காடா துணி ரகத்திற்கு ஏற்ப 3 முதல் 5 ரூபாய் வழங்க வேண்டுமென்றால், அதில் 50 பைசா குறைவாக வழங்கி வந்த நிலையில், மேலும் 40 பைசா குறைத்துள்ளதாக கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவற்றினால் விசைத்தறி தொழில் நலிவை சந்தித்துள்ள நிலையில், கூலி குறைப்பு காரணமாக தொழில் நடத்த முடியாத நிலை இருப்பதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஒப்பந்தப்படி கூலி வழங்க கோரி, பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தற்போது மேலும் கூலி குறைப்பு செய்திருப்பதால் விசைத்தறிகளை எடைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 

தொழில் முடக்கம் ஏற்பட்டால் உற்பத்தி குறைப்பு செய்வதற்கு பதிலாக, ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி குறைப்பு செய்திருப்பதை ஏற்க முடியாது என கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி தெரிவித்தார். புதிய கூலி ஒப்பந்தம் போட வேண்டுமெனவும், இல்லையெனில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Video in reporter app
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.