கோவை மாவட்டம் பரமத்தி வேலூர் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவர் ஆசிரியராக பணியாற்றிய காலத்திலிருந்தே பள்ளி குழந்தைகளுக்கு அடிக்கடி பொம்மலாட்டம் மூலம் பல கதைகளை கூறியவர்.
இந்நிலையில் தற்போது பொம்மலாட்டம் மூலம் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணம் கரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடலை இயற்றி, அதற்கு ஏற்றவாறு பொம்மைகளை வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தப் பாடலானது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அதுமட்டுமின்றி அழிந்து வரும் இந்த பொம்மலாட்ட கலையை மீட்டெடுக்கும் இவரின் முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'மன அழுத்தத்தைக் குறைக்கும் பொம்மலாட்டம்'