கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்(50). இவர் அருகிலுள்ள காட்டம்பட்டி பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 23 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த தினம் இவர், பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதையும் படிங்க: குத்துச்சண்டை வீரராக மாறிய அமைச்சர் ஜெயக்குமார்!