பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் கோவையில் ஆர்ப்படாட்டம் நடத்தின. இதில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, மனித நேய ஜனநாயக கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, திராவிடர் தமிழர் கட்சி, தமிழர் விடுதலை கழகம் கட்சி போன்ற கட்சியினர்களும் இஸ்லாமிய மக்களும் கலந்துகொண்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதன்பின் மனித நேய ஜனநாயக கட்சியின் ஜவாஹிருல்லா பேசுகையில், நவம்பர் 9ஆம் தேதி உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடம் முழுவதும் இந்துகளுக்கு வழங்கப்பட்டது நியாயமற்றது. அந்த தீர்ப்பு முரண்பாடு நிறைந்ததாக உள்ளது. எனவே தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: சுதந்திர இந்தியாவின் முதல் தடகள வீரர் மில்கா சிங்