பொள்ளாச்சியில் உள்ள லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோருக்குப் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 413 மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
யாக பூஜைகள் முதலில் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அம்மை, அப்பர் வழிபாடு என்று கூறப்படும் பெற்றோருக்கான பாத பூஜையை மாணவர்கள் செய்தனர்.
பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் நல்ல முறையில் தேர்வுகளை எதிர்கொண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டி ஆசிகளை வழங்கினர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு - வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி போராட்டம்