கோவை: மத்திய அரசின் மூன்று வேளான் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அக்டோபர் 3ஆம் தேதி உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகைக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் வன்முறையாக மாறியது.
இதில் அமைச்சர் மிஸ்ராவின் கார் ஏறி இறங்கியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த நிலையில், துணை முதலமைச்சரை வரவேற்க மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அந்த இடத்திற்கு வந்தடைந்தார். அப்போது மிஸ்ராவின் கார் ஏறியதில் மூன்று விவசாயிகள் உயிரிழந்ததால், எதிர்ப்பாளர்கள் இரண்டு வாகனங்களுக்கு தீ வைத்ததில் பல விவசாயிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
![விவசாயிகள் ஆதரவாக கோவையில் வலுக்கும் போராட்டங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-03-protest-for-farmer-visu-tn10027_04102021193815_0410f_1633356495_286.jpg)
இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவை ரயில் நிலையத்தை 50க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டனர். இச்சம்பவத்தை கண்டித்தும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
![விவசாயிகள் ஆதரவாக கோவையில் வலுக்கும் போராட்டங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-03-protest-for-farmer-visu-tn10027_04102021193815_0410f_1633356495_976.jpg)
மேலும் ,விவசாய சட்டத்தைக் கொண்டு வந்த பிரதமரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வாகனத்தில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் முன் பிணை கோரிய மனு தள்ளுபடி