ETV Bharat / state

சட்டவிரோதமாக இயங்கி வந்த 'நான் ஓவன்' தொழிற்சாலைக்கு சீல்! - பொள்ளாச்சி குடோன்

கோவை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 'நான் ஓவன்' பை தயாரித்து வந்த தொழிற்சாலைக்கு வருவாய்த் துறையினர்  சீல் வைத்தனர்.

தொழிற்சாலைக்கு சீல்
author img

By

Published : Jul 9, 2019, 9:02 AM IST

பொள்ளாச்சி அடுத்த ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கசமுத்திரம் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில் தானியங்கி இயந்திரம் மூலம் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 'நான் ஓவன்' பைகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) இரவு குடோனில் இருந்து 'நான் ஓவன்' பைகள் அடங்கிய மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

லாரியில் 'நான் ஓவன்' பைகள் அடங்கிய மூட்டைகள்

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், குடோனை முற்றுகையிட்டனர். இதையடுத்து, மூட்டைகளை ஏற்ற வந்த லாரி அங்கிருந்து சென்றுவிட்டது. பின்னர், தொழிற்சாலையில் இருந்தவர்களிடம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பையை ஏன் உற்பத்தி செய்கிறீர்கள்? என பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தமிழ்நாட்டில் 'நான் ஓவன்' பைகளை உற்பத்தி செய்யலாம், விற்பனை மட்டுமே செய்யக்கூடாது, நாங்கள் கேரளாவில் தான் விற்பனை செய்கிறோம் என தொழிற்சாலையில் இருந்த பணியாளர்கள் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

'நான் ஓவன்' தயாரித்து வந்த தொழிற்சாலைக்கு சீல்

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி வட்டாட்சியர் தணிகைவேல் விசாரணை மேற்கொண்டதில் முறையான அனுமதியின்றி தொழிற்சாலை செயல்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்கள் முன்னிலையில் குடோனுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

Intro:plastickBody:plastickConclusion:பொள்ளாச்சியில் தமிழக அரசால்தடை செய்யப்பட்ட நான் ஓவன் பைதயாரித்து வந்த தொழிற்சாலைக்குவருவாய் துறையினர்  இரவு சீல் வைத்தனர். பொள்ளாச்சி- 8
பொள்ளாச்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நான் ஓவன் பை தயாரித்து வந்த தொழிற்சாலைக்கு வருவாய் துறையினர் இரவு சீல் வைத்தனர்.
பொள்ளாச்சி அடுத்த ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கசமுத்திரம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான  குடோன்  உள்ளது. இந்த குடோனில் தானியங்கி இயந்திரம் மூலம்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நான் ஓவன் பைகள் தயாரிக்கப்பட்டு  வந்துள்ளது.
இரவு குடோனில் இருந்து நான் ஓவன் பைகள் அடங்கிய மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர், இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட  பொதுமக்கள்  குடோனை முற்றுகையிட்டனர்.  இதையடுத்து மூட்டைகளை ஏற்ற வந்த லாரி அங்கிருந்து சென்றுவிட்டது.  பொதுமக்கள் தொழிற்சாலையில் இருந்தவர்களிடம்  தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பையை ஏன் உற்பத்தி செய்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  தமிழகத்தில் நான் ஓவன் பைகளை உற்பத்தி செய்யலாம்,  விற்பனை மட்டுமே செய்யக்கூடாது, நாங்கள் கேரளாவில் தான் விற்பனை செய்கிறோம் என தொழிற்சாலையில் பணியாளர்கள் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பொதுமக்கள் பொள்ளாச்சி கோட்டாட்சியருக்கு தகவல் அளித்தனர்.  இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி வட்டாட்சியர் தணிகைவேல் விசாரணை மேற்கொண்டதில் முறையான அனுமதியின்றி தொழிற்சாலை செயல்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து  பொதுமக்கள் முன்னிலையில் இரவு  குடோனுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.