கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை புலிகள் காப்பகத்திற்கு சொந்தமான மானாம்பள்ளி வனச்சரகம் தீயணைப்புத் துறையினர், சோலையார் எஸ்டேட் அருகிலுள்ள சித்தி விநாயகர் கோயில் காட்டுப்பகுதியில் வன அலுவலர்களுடன் சேர்ந்து கோடையில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில், வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரக மணிகண்டன், தீயணைப்புத் துறை ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர், அப்பகுதியில் காட்டுத் தீயை எரிய விட்டு அதனை எப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற ஒத்திகை நடைபெற்றது. இதில் ஏராளமான வன அலுவலர்களும் தீயணைப்புத் துறையினரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கோடை கால தீ விபத்துகளை தடுக்க தன்னார்வலர்களுக்கு பயிற்சி!