கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலை சட்டப்பேரவை தொகுதி தெற்கு ஒன்றியம் ஊராட்சிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு சிறப்புக் கடன் திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
இதில், கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பத்து மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு கடன் உதவிக்கான காசோலையை வழங்கினார். மேலும், தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏழை, எளிய மக்கள் 5 ஆயிரம் பேருக்கு தனது சொந்த செலவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லை. வெளிமாநிலத் தொழிலாளர்கள் 90 விழுக்காடு பேர் பணிக்குத் திரும்பியுள்ளனர். கால்நடை பராமரிப்புத் துறையில் தீவனங்களின் விலை ஏற்றம் ஊரடங்கு உத்தரவினால் ஏற்பட்டது. விரைவில் தீவனங்கள் பழைய விலைக்கு குறையும்” என்றார்.
இதையும் படிங்க:மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி திட்டம்!