ETV Bharat / state

பட்டா வழங்கும் ஆவணங்களில் கையெழுத்து போடாத வனத்துறை அலுவலர்கள்..! - Kovai Tribal People Petition to provide strap

கோவை: : பழங்குடி இன மக்களுக்கு பட்டா வழங்கும் ஆவணங்களில் கையெழுத்து போடாமல் வனத்துறை அலுவலர்கள் அலைகழிப்பதாக பழங்குடி இன மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பொள்ளாச்சி பழங்குடி இன மக்கள் பட்டா வழங்க கோரி மனு பழங்குடி இன மக்கள் பட்டா வழங்க கோரி மனு கோவை பழங்குடி இன மக்கள் பட்டா வழங்க கோரி மனு Pollachi Tribal People Petition to provide strap Kovai Tribal People Petition to provide strap Tribal People Petition to provide strap
Pollachi Tribal People Petition to provide strap
author img

By

Published : Jan 14, 2020, 7:00 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி, டாப்சிலிப், பொள்ளாச்சி ஆகிய வனச்சரகத்தில் 18 மலைவாழ் கிராமங்கள் உள்ளன. அங்கு காடர் இனத்தைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் 3,500 குடும்பத்தினர் அடிப்படை வசதியின்றி வசித்து வருகின்றனர்.

இதன் காரணமாக, பழங்குடி இன மக்கள் வசித்து வரும் இடங்களுக்கு பட்டா வழங்கக் கோரி பழங்குடி இன மக்கள் கடந்த பத்து வருடங்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வன உரிமைச் சட்டத்தின்படி வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடி இன மக்கள் குடும்பங்களுக்கு பட்டா வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து பழங்குடி இன மக்கள் கூறுகையில், வருவாய்த்துறை சார்பில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் இடங்களில் நில அளவை செய்து பட்டா தர அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வனத்துறை அலுவலர்கள் அதற்கான ஆவணங்களில் கையெழுத்திடாமல் தாமதப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, மலைவாழ் மக்கள் வருவாய்த்துறை அலுவலகத்திற்கு செல்லும்போது வனத்துறை அலுவலர்கள் அங்கு வருவதில்லை.

குற்றம் சாட்டும் பழங்குடி இன மக்கள்

இதனால் தங்களை திருப்பி அனுப்பி அலைகழிப்பதாக புகார் தெரிவித்தனர். புலிகள் காப்பகம் என்ற பெயரில் வன உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வனத்தை விட்டு எங்களை வெளியேற்றவே இதுபோன்ற செயல்களில் வனத்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருவதாக மலைவாழ் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:

குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்

Intro:tribalBody:tribalConclusion:பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மலைவாழ் மக்கள் வசித்து வரும் இடங்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறை தயராக இருந்தாலும், வனத்துறை அதிகாரிகள் ஆவணங்களில் கையெழுத்து இடாமல் அலைகழிப்பதாக மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டு

பொள்ளாச்சி ஜன- 13

பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மலை பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி, டாப்சிலிப், பொள்ளாச்சி ஆகிய வனச்சரகத்தில் 18 மலைவாழ் கிராமங்கள் உள்ளது, அங்கு காடர் இனத்தைச்சேர்ந்த 3,500 குடும்பங்கள் அடிப்படை வசதியின்றி இருந்து வருகின்றனர், இந்நிலையில் மலைவாழ் மக்கள் வசித்து வரும் இடங்களுக்கு பட்டா வழங்க மலைவாழ் மக்கள் கடந்த பத்து வருடங்களாக போராடி வருகின்றனர்? இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வன உரிமைச் சட்டத்தின்படி வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் குடும்பங்களுக்கு பட்டா வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனை அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறை சார்பில் மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களில் நில அளவை செய்து பட்டா தர வருவாய்த்துறை அதிகாரிகள் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் அதற்கான ஆவணங்களில் கையெழுத்திடாமல் தாமதப்படுத்தி வருவதாகவும், அடிக்கடி வருவாய்த்துறை அலுவலகம் வர செல்லும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வராததால் திருப்பி அனுப்பும் நிலையே ஏற்பட்டு தங்களை அலைகழிப்பதாகவும் மலைவாழ் மக்கள் புகார் தெரிவித்தனர் புலிகள் காப்பகம் என்ற பெயரில் வன உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வனத்தை விட்டு எங்களை வெளியேற்றவே இதுபோன்ற செயல்களில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டினர்

பேட்டி -தங்கசாமி பழங்குடியின மக்கள்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.