ETV Bharat / state

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டவர்கள் கைது! - pollachi theft case

கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த நகைகளை மீட்டனர்.

pollachi theft case two persons arrest
author img

By

Published : Oct 21, 2019, 10:14 AM IST

பொள்ளாச்சி காவல் நிலையங்களுக்கு உட்பட்ட நெகமம், கோமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளின் பூட்டுகளை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி சரக காவல் துறையினர் மூன்று தனிப்படை அமைத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் தாலுக்கா போலீசார் கேரள எல்லையான சோதனைச் சாவடியில் உள்ள கோபாலபுரத்தில் தனியார் பேக்கரி முன்பு, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டுடிருந்த இரண்டு பேரைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டதில் மணிகண்டன், சரவணன் என்ற அந்த இரண்டுபேரும் பழைய குற்றவாளிகள் என தெரிய வந்தது.

கோவை
திருட்டில் ஈடுப்பட்ட மணிகண்டன், சரவணன்

அவர்கள் பொள்ளாச்சி, திருப்பூர் என பல பகுதிகளில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் பணம் திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து 30 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

திருடர்களை போலீசார் கைது செய்தனர்

இதையும் படிக்க : தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தை

Intro:arestBody:arestConclusion:பொள்ளச்சி மற்றும் வட்டார பகுதிகள் திருட்டில் ஈடுப்பட்ட பலே திருடர்கள் இரண்டு பேரை தாலுக்கா காவல் நிலையாபோலீசார் கைது செய்தனர், 30 பவுன் நகை மீட்பு.பொள்ளாச்சி- 19 பொள்ளாச்சி காவல் நிலையங்களுக்கு உட்பட்ட நெகமம், கோமங்கலம், மற்றும் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீட்டை உடைந்து திருட்டு சம்பவங்கள் அரகேறினா, இதையடுத்து மேற்க்கு மண்டல காவல்துறை அதிகாரி, மாவட்ட எஸ்.பி. உத்திரவின் பேரில் டி.எஸ்.பி அறிவுறுத்திலின் பேரில் பொள்ளாச்சி சரக காவல் நிலையா போலீசார் CCTV கேமரா மூலம் ஆய்வு செய்தும்,மூன்று தனிப்படை அமைத்து தேடி வந்தனர், இந்நிலையில் தாலூக்கா போலீசார் கேரளா எல்லையான சோதனை சாவடியில் உள்ள கோபாலபுரத்தில் தனியார் பேக்கரி முன் சந்தேகத்தின் நின்று கொண்டு இருந்த இருந்த இரண்டு பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் தகவல் கூறியதின் பேரில் போலீசார் காவல் நிலையத்தில் விசாரனை மேற்கெண்டதில் மணிகண்டன், சரவணன் பழைய குற்றவாளிகள் என தெரிய வந்தது இவர்கள் பொள்ளாச்சி, திருப்பூர் என பல பகுதிகளில் வீட்டை பட்டபகலில் உடைத்து நகைகள் பணம் திருடியதை ஒப்பு கொண்டனர், இவர்களிடம் இருந்து 30 பவுன் நகைகள் மீட்கப்பட்டனா , மேலும் இவர்களிடம் இருந்து 40 பவுன் நகை கைப்பற்றபட வேண்டும், கொள்ளை வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கட்ட விசாரனை மேற்கொள்ளபடும் என தாலூக்கா போலீசார் தெரிவித்தனர், இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பராட்டி வெகுமதி வழங்கினர், பலே திருடர்கள் சிக்கியது காவலர்கள் மத்தியில் நிம்மதி அடைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.