ஆழியாறு அணையில் இருந்து பொள்ளாச்சி கால்வாய் வழியாக சமத்தூரில் உள்ள எலவக்கரை குளத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது.
இதையடுத்து ஆழியாறு அணையில் இருந்து 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட எலவக்கரை குளத்திற்கு பொதுப்பணித்துறை அலுவலர்கள் தண்ணீர் திறந்துவிட்டனர்.
இதுகுறித்து அலுவலர்கள் கூறும்போது, 'சமத்தூர், கரியஞ்செட்டிபாளையம், கம்பாலப்பட்டி ஆகிய கிராமங்களின் குடிநீர் தேவைக்கும், குளத்தைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் 250 ஏக்கர் பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
எலவக்கரை குளத்திற்கு ஆண்டுக்கு இரண்டு முறை தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது விநாடிக்கு 60 கனஅடி நீர் 11 நாட்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் மூலம் 12ஆம் வகுப்பு அலகுத் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு!