கேரள மாநிலம் கொச்சியிலிருந்து டேங்கர் லாரி மூலம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பெட்ரோல் பங்க்கிற்கு பெட்ரோல் கொண்டுவருவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு டேங்கர் லாரி நெகமம் வந்துள்ளது. நெகமம், சின்னேரி பாளையத்தில் உள்ள சாலை ஓரத்தில் ஓட்டுநர் ஒருவர் லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மூன்று பேர் தங்களிடமிருந்த கேனில், லாரியில் இருந்த பெட்ரோலை திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து ட்ரான்ஸ்போர்ட் மேலாளர் நெகமம் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் விசாரணைமேற்கொண்டார். அதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த கமலேஷ், விக்ரம், தேவனாம் பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் திருட்டுச் சம்பவம் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. இதனால் இரவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லா சூழ்நிலை ஏற்படுகிறது. காவல் துறையினர் இரவு நேரங்களில் வாகன ரோந்து பணியில் ஈடுபடவேண்டும்’ என்றனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டவர்கள் கைது!