ETV Bharat / state

உடல்நலக்குறைவால் துபாயில் அவதிப்பட்ட நபர்; கோவைக்கு அழைத்து வந்து சிகிச்சை

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக துபாயில் இருதய நோயால் அவதிப்பட்டு வந்த ஏசி மெக்கானிக் தமிழக அரசு உதவியுடன் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

person suffering ill health in Dubai With the help of the Tamil Nadu government he was brought to Coimbatore for treatment
தமிழக அரசு உதவியால் துபாயில் அவதிப்பட்டு வந்தவரை கோவைக்கு அழைத்து வந்து சிகிச்சை
author img

By

Published : Mar 20, 2023, 1:27 PM IST

தமிழக அரசு உதவியால் துபாயில் அவதிப்பட்டு வந்தவரை கோவைக்கு அழைத்து வந்து சிகிச்சை

கோவை: மதுக்கரை முஸ்லிம் காலனியைச் சேர்ந்தவர் பைரோஸ் கான் நவாப் கான் (43). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்று அங்கு ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இருதய கோளாறு மற்றும் மூளை ரத்தக் கசிவு நோயால் துபாய் நாட்டில் என்.எம்.சி ராயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பொருளாதார ரீதியாக தொடர்ந்து சிகிச்சை பெற முடியாததால் இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்து தமிழகத்தில் தனது சொந்த ஊரில் சிகிச்சை பெறுவதாக விரும்பினார்.

இந்திய தூதரக அலுவலக நண்பர் மூலம் கோவையைச் சார்ந்த சமூக ஆர்வலர் சுபி கிருஷ்ணன் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழக அமைச்சர் உதயநிதியிடம் துபாயில் சிகிச்சை பெற்று வரும் நபரை தமிழகத்திற்கு அழைத்து வர உதவி செய்யும்படி சுபி கிருஷ்ணன் கேட்டார். அமைச்சர் உதயநிதி உத்தரவின் பேரில் பொது துறை மற்றும் சுகாதாரத் துறை மூலம் பைரோஸ் கானை துபாய் நாட்டில் இருந்து விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழக அரசின் நடவடிக்கையால் இன்று காலை பைரோஸ் கான் விமான மூலம் கொச்சி வந்தடைந்தார். கொச்சி விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது தாய், தந்தை மற்றும் மனைவி தம்பி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் சமூக ஆர்வலர் சிபி கிருஷ்ணன் மருத்துவமனை முதல்வரை சந்தித்து தமிழக அரசுக்கும் அரசு மருத்துவமனைக்கும் நன்றி தெரிவித்ததோடு சிறப்பான சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினரையும் கேட்டுக்கொண்டார்.

இருதய நோயால் பாதிக்கப்பட்ட பைரோஸ் கான் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. ஒரு குழந்தை பத்தாம் வகுப்பும், மற்றொரு குழந்தை சிறப்பு குழந்தையாக சிறப்பு பள்ளியிலும் படித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கல்விக் கடன் காப்பீடு பணத்தில் ஆன்லைன் ரம்மி.. ரூ.34 லட்சம் ஊழல் செய்த வங்கி அதிகாரி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.