ETV Bharat / entertainment

புதுப் படங்களை விமர்சனம் செய்ய தடை கோரிய வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - TAMIL MOVIE REVIEWS CASE

Tamil Movie Reviews case: திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு திரை விமர்சனங்களை சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதிக்க மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், சென்னை உயர்நீதிமன்றம் (Credits - Tamil Film Active Producers Association X account, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 3, 2024, 1:37 PM IST

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’கங்குவா’ திரைப்படம் குறித்து சமூக ஊடகங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வெளியானது. இதன் எதிரொலியாக திரையரங்குகளில் படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை வெளியிடுவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் போது, அவை குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வெளியிடப்படுவதால் படங்கள் தோல்வி அடைவதாகவும், திரைத்துறையில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சவுந்தர் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியாவதால், படத்தை பார்க்க விரும்பும் மக்களின் மனநிலை மாறுவதாகவும், படத்தில் நடித்த நடிகர்கள், இயக்குநர் குறித்து அவதூறு பரப்பப்படுவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என தெரிவித்த நீதிபதி, விமர்சனம் கருத்து சுதந்திரம் என்பதால், பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும், சில படங்கள் நல்ல விமர்சனங்களை பெறும்போது ஏற்றுக் கொள்ளும் திரைத்துறையினர் எதிர்மறை விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’புஷ்பா 2’ இசையமைப்பாளர் சர்ச்சை: படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து சாம் சி.எஸ் பதிவு!

மேலும், திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க மறுத்த நீதிபதி, வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.