கோயம்புத்தூர் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்வதை கண்டித்து விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ’தமிழ்நாடு அரசு ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும்; பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார விவசாயிகளின் வாழ்வாதாரமான ஆழியார் அணை நீரை கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும்.
மேலும் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை அரசு செயல்படுத்தவேண்டும்; இந்த திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் ரூ.936 கோடி அரசு நிதி ஒதுக்கியும் 130 கிலோமீட்டர் அணையில் இருந்து நீரை ஒட்டன்சத்திரம் பகுதிக்கு கொண்டு செல்ல உள்ளனர். முதலமைச்சர் விவசாயிகளின் நலன் கருதி இத்திட்டத்தை கைவிட வேண்டும் எனவும்; இல்லை எனில் அடுத்தகட்ட போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராக உள்ளனர். ஆழியார் அணையை நம்பி உள்ள நிலங்களைக் காப்பாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் முன்வர வேண்டும்’ என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் - பொருள்கள் விநியோகம் பாதிப்பு