கோயம்புத்தூர் மாவட்டத்தில் பந்தசாலை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணான பதிலளித்துள்ளார்.
அவர் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அவ்வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், செல்வபுரம் பகுதியை சேர்ந்த ஆசிக் (28) என்பது தெரியவந்தது.
மேற்கொண்டு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பலனாக அவரிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அது மட்டுமின்றி திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் நிலையத்தில் ஆசிக் மீது வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவாகி உள்ளதும் தெரியவந்தது.
இந்த இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் ஆசிக்கின் நண்பர்கள் இருவர் சம்பந்தப்பட்டிப்பதும் தெரியவந்தது. அவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி: மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் கைது!