ETV Bharat / state

பொள்ளாச்சியில் ஓபிஎஸ் கூட்டத்திற்காக பெண்களுக்கு பணப்பட்டுவாடா

கோவை: பொள்ளாச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் பரப்புரை கூட்டத்திற்காக அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்ததையடுத்து, அரசு பள்ளி வளாகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

பெண்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்ட போலி ரூபாய் நோட்டுக்கள்
author img

By

Published : Apr 2, 2019, 8:19 PM IST

தமிழ்நாடு முழுவதிலும் மக்களவைத் தேர்தல் பரப்புரைகளைகட்டி வருகிறது. இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மகேந்திரன் என்பவரை ஆதரித்து பரப்புரை செய்வதற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை அதிமுக பிரமுகர்கள் அழைத்து வந்திருந்தனர். அந்த பெண்களுக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வைத்து பணம் பட்டுவாடா நடப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.

பெண்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்ட போலி ரூபாய் நோட்டுக்கள்

இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி ரவிக்குமார், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது பெண்களுக்கு டோக்கனாக வழங்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் நிலையில் துணை முதலமைச்சர் பிரச்சாரத்திற்காக பெண்கள் அழைத்து வரப்பட்டு பணம் பட்டுவாடா செய்வதற்காக டோக்கன் வழங்கிய விவகாரம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொள்ளாச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக புகார் - அரசு பள்ளி வளாகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அதிரடி ஆய்வு. நோட்டுகள் பறிமுதல் செய்து விசாரணை.

பொள்ளாச்சி ஏப்ரல் 2

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் களைகட்டி வருகிறது இதில் அதிமுக சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மகேந்திரன் என்பவரை ஆதரித்து இன்று பொள்ளாச்சிக்கு தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பிரச்சாரம் நடைபெற உள்ளது இதற்காக அழைத்து வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் அருகே உள்ள ஏபிடி ரோடு அரசு நடுநிலைப் பள்ளியில் வைத்து பணம் பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்தது இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் அங்கு தேர்தல் நடத்தும் அதிகாரி ரவிக்குமார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர் அவர்கள் வருவதற்குள் அங்கிருந்த பெண்களை அதிமுக பிரமுகர்கள் அப்புறப்படுத்தினர் இதையடுத்து அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள் அங்கு பெண்களுக்கு டோக்கனாக வழங்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இவர்கள் விதிகள் அமலில் இருக்கும் நிலையில் துணை முதல்வர் பிரச்சாரத்திற்காக பெண்கள் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக அதிமுகவினர் அரசு பள்ளி வளாகத்தில் அத்துமீறி டோக்கன் வழங்கிய விவகாரம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.