கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையின் பேரில், தமிழ்நாடு அமைச்சர்கள் தீவிரமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோரை தமிழ்நாடு முதலமைச்சர் நியமித்துள்ளார். அதன்படி, சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்புச் சிகிச்சை வார்டுகளை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து அங்கு செய்யப்பட்டுள்ள சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு