கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா (தீமிதி திருவிழா) டிசம்பர் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 85 அடி மூங்கில் கொடி கம்பம் ராஜகோபுரம் அருகே நடப்பட்டது. அதன்பின் மயான பூஜை ஆழியார் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மயானத்தில் ஜனவரி 3ஆம் தேதி நடு நிசியில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று காலை தொடங்கியது. இதில் 47 அடி நீலமும் 11 அடி அகலம் கொண்ட குண்டத்துக்கு கோயில் பூசாரிகள் பூஜைகள் செய்து, முதலில் குண்டத்தில் பூ மற்றும் எலுமிச்சம் பழத்தை இட்டு தொடங்கி வைத்தனர்.
அதன்பினஅ கோயில் பூசாரிகள் ஒருவர் பின் ஒருவராக குண்டத்தில் இறங்கியதை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி, தங்களது நேத்தி கடனை செலுத்தினர். விழாவில் பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, தி.மு.க.தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் மருத்துவர் மகேந்திரன்,ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திருவள்ளுவருக்கு கோயில்..! ஊர்வலமாக சென்று மக்கள் கொண்டாட்டம்!