ETV Bharat / state

கடைசி நாள் நவராத்திரி: வெங்காய விலை குறைய கொலு பொம்மைகளுடன் வெங்காயம் வைத்து வழிபாடு! - கோவை மாவட்ட செய்திகள்

கோவை: நவராத்தி முடிவடைய உள்ள நிலையில் கோவை டிவிஎஸ் நகர் பகுதியில் வெங்காய விலை குறைய வேண்டும் என கொலு பொம்மைகளுடன் வெங்காயத்தையும் சேர்த்து வைத்திருந்தனர்.

Kolu
Kolu
author img

By

Published : Oct 26, 2020, 4:12 AM IST

நவராத்திரி விழா என்றாலே பெரும்பாலானோர் வீட்டில் ஒன்பது நாள்களுக்கு கொலு பொம்மைகள் வைத்து விரதமிருந்து லக்ஷ்மி தேவியை வழிபடுவது வழக்கம். அந்த ஒன்பது நாள்களும் கொலு வைத்தவர்கள் இல்லத்தில் பூஜைகள் செய்து படையல், விருந்துகள் வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று நிகழ்வுகள், கடவுள் வழிபாடுகள் போன்றவற்றைக் கொலு பொம்மைகளாக வைத்து வழிபடுவர்.

அதேபோல், இந்த காலத்தில் நவீன விஷயங்கள் அதிகமாக வரத் துவங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு வீட்டில் நவீன யுகத்தில் இருக்கும் நடைமுறை வாழ்க்கையினை கொலு பொம்மைகளாக வைத்து வருகின்றனர். நவராத்திரி விழா முடிவடைய உள்ள நிலையில், கோவை டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் இந்த வருடம் உலகையே அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் ஒழிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, விநாயகர் சிலைக்கு முக கவசம் அணிவித்தது போல் கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டனர்.

நவராத்திரியின் கடைசி நாள்

அதுமட்டுமில்லாமல் கடந்த 10 நாள்களாக தமிழ்நாட்டில் அதிகமாக பேசப்பட்டு வந்த வெங்காய விலைஉயர்வு குறைய வேண்டும் என்பதற்காக இந்த கொலு பொம்மைகளுடன் வெங்காயத்தையும் சேர்த்து வைத்திருந்தனர். இந்தக் கொலு பொம்மைகள் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அனைவரையும் கவரும் வண்ணமும் இருந்தது. இந்த ஆண்டில் இந்த வைரஸ் தொற்று நீங்க வேண்டும் என்றும், அதேசமயம் வெங்காயத்தின் விலை குறைய வேண்டும் என்றும் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

நவராத்திரியின் கடைசி நாள்

இதையும் படிங்க:

கடன் தவணைகளுக்கு வட்டி இல்லை - மத்திய அரசின் முடிவுக்கு ராமதாஸ் வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.