கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இரு தரப்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து ஒரு தரப்பு வழக்கறிஞர்களும், அதை ஆதரித்து மற்றொரு தரப்பு வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கறிஞர்கள், அச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த மற்றொரு தரப்பினர், அச்சட்டத்தால் ஏற்படும் நன்மைகளை கூறியும் வாகனங்களில் வருவோருக்கு இனிப்புகள் வழங்கியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் போராட்டங்களில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருப்பூரில் ரயில் மறியல்!