கடந்த ஆறாம் தேதியன்று தாய்லாந்திலிருந்து நண்பர்கள் ஏழு பேர் சுற்றுலாவிற்கு தமிழ்நாடு வந்து சென்னையைச் சுற்றிப் பார்த்துள்ளனர்.
பின்னர் ஈரோடு வந்த இவர்களில் டான் ரோசாக் என்பவருக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்ததால் அங்கு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அவரை அவரது நண்பர்கள் உடனே தாய்லாந்திற்கே அனுப்ப மருத்துவக் குழுவோடு கோவை விமான நிலையம் வந்துள்ளனர். ஆனால் விமான நிலையத்தில் அவர்களுக்கு விமானத்தில் செல்ல அனுமதி வழங்கப்படாததால் அவரை கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். தற்போது இவர் சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமணையில் இவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இனி இவரின் ரத்த மாதிரிகள், பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை அறிவிக்கப்படும். அதுவரை அவர் கொரோனா வார்டில் சிகிச்சையில் இருப்பார் என மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கரோனா எதிரொலி - கர்நாடகாவில் பள்ளி தேர்வுகள் ஒத்திவைப்பு!