ETV Bharat / state

"தமிழகத்திற்கு பேரிடி காத்திருக்கிறது" - ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை! - குண்டு வெடிப்பு சம்பவ குற்றவாளிகள்

Jharkhand Governor C.P.Radhakrishnan warned tn govt: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வதால், தமிழ்நாட்டிற்கு பேரிடி காத்திருக்கிறது என ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

Jharkhand Governor C.P.Radhakrishnan warned tn govt
தமிழகத்திற்கு பேரிடி காத்திருக்கிறது - ஜார்கண்ட் ஆளுநர் எச்சரிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 10:57 AM IST

"தமிழகத்திற்கு பேரிடி காத்திருக்கிறது" - ஜார்கண்ட் ஆளுநர் எச்சரிக்கை

கோயம்புத்தூர்: கோவையில் உள்ள நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று (செப்.3) வழிபாடு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் எல்லோருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.

யாரெல்லாம் சமூகத்திற்கு தொண்டாற்றுகிறார்களோ, நலன் தருகிறார்களோ அவர்களுக்கு உரிய நேரத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், தீயோர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிறைச்சாலை தீயோர்கள் இருக்கும் இடமாக இருக்க வேண்டும். கோவை குண்டுவெடிப்பில் 10 நிமிடத்தில் 63 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம்.

அதன்மூலம் சமுதாயத்திற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். காரில் வெடிகுண்டு வெடித்து இருந்தால் கோவையில் 5 கிலோ மீட்டர் சுற்று அளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். தமிழ்நாட்டிற்கு பேரிடி காத்திருக்கிறது என எச்சரிக்கை விடுத்த ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தற்போது வெடிகுண்டு பிரச்னையில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது தேசத்திற்கு பாதுகாப்பற்ற செயல் ஆகும் என்றார். மேலும் குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்தால், மீண்டும் தமிழ்நாட்டில் குண்டு வைப்பார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கச்சத்தீவு விவகாரத்தில் நிரந்தர முடிவு வேண்டும் - இலங்கை முன்னாள் எம்பி தர்மலிங்கம் சித்தார்த்தன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.