கோவை சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் பகுதியில் உள்ள கோபாலகிருஷ்ணன் கோயிலில் நேற்று (ஜூன் 11) காலை ஒருவர் சாமி தரிசனம் செய்வது போல் சென்றுள்ளார்.
பின்னர், அங்கிருந்த அம்மன் சிலையில் இருந்து நகையை திருடிக் கொண்டு தப்ப முயன்றுள்ளார். இதனைக் கண்ட கோயில் பூசாரி சத்தமிட்டார். அப்பகுதியில், இருந்த பொது மக்கள் நகைத் திருடிய நபரை பிடித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரிடமிருந்து, அம்மன் சிலையில் இருந்து திருடிய நகைகள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது. இது குறித்து, காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பொதுமக்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.