ETV Bharat / state

காட்டை விட்டு வெளியேறும் யானைகள்- காரணம் என்ன? சிறப்பு தொகுப்பு

உணவுத் தேவைக்காக வனத்தைவிட்டு வெளியேறும் யானைகளை தடுக்க வனத் துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு.

author img

By

Published : Jul 24, 2021, 2:30 PM IST

காட்டை விட்டு வெளியேறும் யானைகள்
காட்டை விட்டு வெளியேறும் யானைகள்

கோயம்புத்தூர்: இந்தியாவில் தற்போது, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், அஸ்ஸாம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் சுமார் 30 ஆயிரம் யானைகள் உள்ளதாக ஆய்வில் கூறப்படுகிறது.

லட்சக்கணக்கில் இருந்த யானைகளின் அழிவுக்கு முக்கிய காரணம் பல்வேறு பணிகளுக்காக அதன் வாழ்விடம் சுருங்குதல், வேட்டை, விபத்துகள் என யானைகளின் உயிரிழப்பு நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள 7 வனச்சரகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் சுமார் 160 யானைகள் உயிரிழந்துள்ளன. இதற்கு யானைகள் வனப்பகுதியில் இருந்து உணவிற்காக வெளி வருவதும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

வனத்தைவிட்டு வெளியேறும் யானைகள்

யானைகள் தினசரி 200 கிலோ பசுந் தீவனங்களையும், 150 லிட்டர் தண்ணீரையும் உணவாக எடுத்துக் கொள்கின்றன. உணவுத் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுதோறும் 300 முதல் 400 சதுர கி.மீ. தூரம் வரை யானைகள் பயணிக்கின்றன. இந்தப் பயணத்தின்போது பழங்கள், மரங்களிலுள்ள செடிகள், இலைகளை விரும்பி உண்ணும். அதிலிருந்து கீழே விழும் விதைகள், மக்கி செடிகளாக வளரும். அதைத் தொடர்ந்து காளான்கள் வளரும். காளானை நம்பி சில உயிரினங்கள் இருக்கின்றன. காடுகளில் யானை செல்லும்போது உருவாக்கும் புதிய பாதைகளில் மற்ற விலங்குகள் எளிதாக செல்ல முடியும்.

அது தவிர யானை சாப்பிட்டது போக, கீழே போடும் செடி, கொடிகளை, பின்தொடர்ந்து வரும் காட்டு மாடுகள், மான்கள் சாப்பிடும். மரக் கிளைகளை உடைத்து இலைகளை யானை உண்பதால், வெயில்படாத இடங்களில் கூட சூரியக்கதிர்கள் ஊடுருவி புற்கள் வளரும். அதை நம்பி பல சிறு உயிரினங்கள் வாழ்கின்றன.

காடுகளின் காவலர்

இப்படி பல உயிரினங்கள் வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் யானைகள் உதவுகிறது. காடுகளின் பாதுகாவலனாக இருக்கும் யானைகளுக்கு தற்போது உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. உணவிற்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களில் நுழைகிறது. இதன் காரணமாக மனித மிருக மோதல், விபத்துகளின் சிக்கி யானைகள் உயிரிழந்து வருகின்றன.

இவ்வாறு காட்டை விட்டு வெளியே வரும் யானைகளை தடுத்து நிறுத்த வனத் துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் வனத்திலிருந்து வெளியே வரும் யானைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவே இவைகள் வெளியே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற மாற்று யோசனையில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ஏன் வனத்தை விட்டு யானைகள் வெளிவருகிறது என்பது குறித்த ஆய்வு செய்ய கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி. அதில், வனத்தைவிட்டு வெளியேறும் ஒற்றை ஆண் யானை, பெண் யானை தங்களது குட்டிகளுடன் கூட்டமாக வனத்தை விட்டு கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் புகுவதும் நடக்கிறது.

விவசாய நிலத்திற்குள் புகும் யானைகள்

இது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், “கோவை வனக் கோட்டம், 70 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்த வனப்பகுதி கேரளாவிலிருந்து பவானிசாகர் அணை வரை யானைகள் வந்து செல்லக்கூடிய முக்கிய பாதைகளாக உள்ளது. இந்த வனப்பரப்பு 4 சமவெளிகளை கொண்டுள்ளது இதன் காரணமாக வாளையார் முதல் பவானிசாகர் அணை வரை 350 கிலோ மீட்டருக்கு யானைகள் வலசை செல்கிறது. இதில், மலைப்பகுதியில் சரிவாக இருப்பதால் வனப்பகுதியை விட்டு வெளியே சென்று பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு வரை செல்கிறது. அவ்வாறு செல்லும்போது விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது.

இதனையடுத்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணிப்புக் கேமராக்கள் கொண்டு கண்காணித்தபோது அதில் ஆண் யானைகள் அதிகமாக கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் காட்டைவிட்டு வெளியே வந்து வலசை செல்வது தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் யானைகள் குட்டிகளோட அதிகமாக அதிகமாக வலசை செல்வது தெரியவந்துள்ளது. வழக்கமாக யானைகள் தண்ணீருக்காகவும் உணவிற்காகவும் வெளியே வரும் ஆனால் இந்தக் வனக்கோட்டத்தில் மலை பகுதியில் அதிகளவில் சரிவுகள் இருப்பதால் வனப்பகுதியை விட்டு யானைகள் வெளியே வருகிறது.

ஆரோக்கியமான உணவு தேவை

வனப்பகுதியில் இருந்து சரிவு ஆரம்பிக்கும் பகுதி இருப்பதால் குட்டிகளுடன் வரும் யானைகள் அந்த பகுதியை தேர்ந்தெடுப்பதில்லை, சமதளப் பரப்பு சென்று வருகிறது. அதே நேரத்தில் அந்த யானைகளுக்கு பால் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளதால் அதற்கு ஆரோக்கியமான உணவு தேவைப்படுகிறது. அதனால் பெண் யானைகள் அதிகளவில் பயிர்களை சாப்பிட வருகிறது. இதன் மூலம் யானை குட்டிகளின் உணவு தேவை பூர்த்தியாவதாக தெரிவித்தார்.

மேலும், இந்த வனக்கோட்டத்தில் நிலத்தோற்றம் கிழக்குப்பகுதி யானைகள் வலசை செல்லும் பாதை சரிவுகளும் மேடுகளும் இருப்பதாலும், அந்நிய களைச் செடிகளும் காணப்படுகின்றன. அதனை அகற்றி காட்டிற்கே உரித்தான மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். இதன் மூலமாக யானைகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும்” எனத் தெரிவித்தார்.

யானைகள் வருகையை தடுக்கும் பணிகள்

இதுகுறித்து கோயம்புத்தூர் வன உயிரின பாதுகாப்பு அமைப்பின் (CWCT) தலைவர் முருகானந்தம் கூறுகையில், “தற்போது வனப்பகுதிக்குள் யானைகளுக்கான உணவு பற்றாக்குறை இருப்பதால் யானைகள் காட்டை விட்டு வெளியே வருகிறது. மேலும், வலசை செல்லும்போது விவசாய பயிர்களை சாப்பிடுவதால் அந்த ருசிக்காகவும் வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளிவருகிறது. மேலும், பெண் யானைகளுக்குத் தேவையான உணவு இல்லாததாலும், வனத்தை விட்டு வெளியே வந்து பாலை அதிகரிக்கச் செய்யும் விவசாய பயிர்களை சாப்பிடுகிறது.

காட்டை விட்டு வெளியேறும் யானைகள்

யானைகள் வனத்தை விட்டு வெளியே வராமல் இருக்க செந்நா, லாண்ட்டனா, போன்ற களைச்செடிகளை அகற்ற வேண்டும். அதன்பின்னர் யானைகளுக்குப் பிடித்தமான பயிர்களை நடவு செய்யும்போது யானைகள் வெளியே வருவதைத் தடுக்க முடியும், யானைகள் முழுவதுமாக வெளியே வருவதை தடுப்பது என்பது இயலாத காரியம்.

ஆனால், பயிர் வகைகளை பயிரிட்டு வனத்திற்குள் தேவையான நீர் இருப்பையும் உறுதி செய்தால், யானைகள் வெளி வருவதை கட்டுப்படுத்த முடியும்” என்றார்.

இதையும் படிங்க: கோயில் யானை பராமரிப்பு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.