கோயம்புத்தூர்(Elephant died): காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட மானார் வனப்பகுதியில் காரமடை வனத்துறையினர் புதன்கிழமை நேற்று (டிச.21) மாலை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, பவானி ஆற்றுப் படுகை அருகே துர்நாற்றம் வந்துள்ளது. அந்த இடத்திற்கு வனப் பணியாளர்கள் சென்று பார்த்த போது ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து, வனத்துறை உயர் அலுவலர்களுக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்தத் தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.
மேலும், இரவு நேரத்தை நெருங்கியதாலும், அந்தப் பகுதியில் மற்ற யானைகளின் நடமாட்டமும் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் யானையின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், நாளை (டிச.23) காலை வனத்துறை மருத்துவக் குழுவினர் யானையின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய உள்ளதாகவும், அதன் முடிவிலேயே யானை உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் எனவும் வனச்சரகர் மனோகரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: VideoIn: காற்றில் பறந்த இளைஞர் - நடந்தது என்ன?