ETV Bharat / state

'திமுக அரசு வெறும் 1 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளது' - DYFI துணை செயலாளர் பாலசுந்தரபோஸ் - DYFI அமைப்பினர் சைக்கிள் பயணம்

4 கோரிக்கைகளை வலியுறுத்தி DYFI (Democratic Youth Federation of India) அமைப்பினர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருச்சி வரை சைக்கிள் பேரணி மேற்கொள்கின்றனர்.

’திமுக அரசு வெறும் 1லட்ச பேருக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளது’ - DYFI துணை செயலாளர் பாலசுந்தரபோஸ்

author img

By

Published : Apr 21, 2022, 7:49 PM IST

Updated : Apr 21, 2022, 10:04 PM IST

திருச்சி: திருச்சியில் மே 1ஆம் தேதி அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை நிரந்தரப் பணியிடங்களாக உருவாக்கிட வேண்டும், சிறு - குறு தொழில் நிறுவனங்களைப் பாதுகாத்திட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை விற்கக்கூடாது என்கின்ற 4 கோரிக்கைகளை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாபெரும் கூட்டம் நடைபெறுகிறது.

திருச்சி வரை சைக்கிள் பயணம்: இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் நான்கு மூலைகளிலிருந்தும் (சென்னை, கன்னியாகுமரி, கோவை, பாண்டிச்சேரி) சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

’திமுக அரசு வெறும் 1லட்ச பேருக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளது’ - DYFI துணை செயலாளர் பாலசுந்தரபோஸ்

கோவையில் இந்தப் பயணக்குழுவிற்கு DYFI-இன் மாநிலத் துணைச்செயலாளர் சி.பாலசுந்திரபோஸ் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள பெரியார் படிப்பகம் முன்பு, இப்பயணம் தொடங்கப்பட்டது. இந்த சைக்கிள் பயணத்தை DYFI-இன் கேரள மாநிலச்செயலாளர் தாமஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கிய திமுக: இந்நிகழ்வில் கோவை மாவட்ட DYFI அமைப்பினர், தந்தை பெரியார் திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், CITU கோவை மாவட்டத் தலைவர் பத்மநாபன், SFI கோவை மாவட்டச்செயலாளர் தினேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயண குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த பாலசுந்திரபோஸ், ”ஒன்றிய அரசு 9 லட்சத்திற்கும் மேலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை தருவதாகக் கூறிவிட்டு 1 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. எனவே ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், ஒன்றிய அரசு மத வெறியைத்தூண்டி விடுவதாகவும் அதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனுமதிக்காது எனவும் தெரிவித்துக்கொண்டார்.

இதையும் படிங்க: கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்து விசாரணை

Last Updated : Apr 21, 2022, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.