கோயம்புத்தூர்: ஆர்.எஸ். புரம் பகுதியில், 'அழகான கோவை' என்ற தலைப்பில் சாலை விழா நடைபெற்றது. இதனை சைக்கிள் பேரணியாக நடத்தினர். இப்பேரணியானது கோயம்புத்தூரில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் சாலைப் பாதுகாப்பு குறித்து கூறும் வகையிலும் இருந்தது.
இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணியில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசம் அணிய வேண்டும். கரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
சைக்கிள் பேரணி
மேலும் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைவரும் நடைப்பயிற்சி, சைக்கிளிங் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். ஆர்.எஸ். புரத்தில் தொடங்கிய இந்தச் சைக்கிள் பேரணியானது, உக்கடம் வழியாக ரேஸ்கோர் வந்தடைந்தது. இவர்கள் பயணித்த பாதைகள் அனைத்தும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இடங்களாகும்.
தற்போது மேம்பாலப் பணிகள், ஸ்மார்ட் சிட்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதால், வாகனங்களை இயக்க கடினமாக இருந்தாலும், இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் கோயம்புத்தூர் சிறப்பாக இருக்குமென பலரும் தெரிவித்தனர். இந்தப் பேரணி கோயம்புத்தூர் மக்கள் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது.
இதையும் படிங்க: கப்பலில் உல்லாச போதை விருந்து - ஷாருக்கான் மகன் உள்பட 13 பேர் கைது!