தமிழ்நாட்டில் இன்று (செப்.22) ஒரேநாளில் 5,337 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,52,674ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இன்று (செப்.22) கோவை மாவட்டத்தில் புதிதாக 595 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை 27,157ஆக உயர்ந்துள்ளது.
இன்று (செப்.22) ஒரேநாளில் 507 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், மாவட்டத்தில் மொத்தமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 22,206ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 389 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவையில் ஒரே நாளில் 568 புதிய கரோனா பாதிப்புகள்!