கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "அதிமுக ஆண்மையற்ற அரசா, ஆண்மையுள்ள அரசா என்ற சந்தேகம் ஹெச். ராஜாவிற்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. அவரது சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு அதிமுகவிற்கு உள்ளது.
அதிமுகவில் காளைகள் இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். காளைகள் இருக்கலாம் ஆனால், அவை செயல்படக் கூடிய காளைகளாக இருக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: பாடகர் எஸ்பிபியின் உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை