கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே கணவரை இழந்த 75 வயது மூதாட்டி ஒருவர் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வசித்துவருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி என்ற இளைஞர் நேற்று முன்தினம் (டிச. 02) தனியாக இருந்த மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடனே மூதாட்டி கூச்சல் போடவும் பக்கத்து தோட்டத்தில் இருந்த நபர்கள் வெள்ளிங்கிரியை பிடிக்க சென்றபோது தப்பித்துச் சென்று தலைமறைவானார்.
இதையடுத்து கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், காவல் துறையினர் தலைமறைவான வெள்ளிங்கிரியைத் தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று, அதே பகுதியில் தோட்டத்தில் பதுங்கியிருந்த வெள்ளிங்கிரியை கோமங்கலம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மூதாட்டி பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.