கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட வால்பாறை, டாப்சிலிப், வெள்ளி முடி, கீழ் பூனாச்சி, நெடுங் குன்று பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள், அவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக தாங்கள் வசிக்கும் பகுதிகளில் அனுபவ நில பட்டா வழங்க தீர்மானங்கள் நிறைவேற்றி மனுக்கள் அளித்திருந்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவின்பேரில் சார் ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில் வனத் துறையினர், பழங்குடியினர் நலத் துறை, வருவாய்த் துறையினர் பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பின் மலைவாழ் மக்கள் 208 பேருக்கு அனுபவ நில பட்டா வழங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இது குறித்து வைத்தியநாதன் கூறுகையில், "மாவட்ட ஆட்சியரது உத்தரவின்பேரில் மலைவாழ் மக்களுக்கு அனுபவ நில பட்டா வழங்கப்பட உள்ளது. மொபைல் மூலம் மருத்துவ வசதி செய்து தர குழுக்கள் அமைக்கப்படவுள்ளன" எனத் தெரிவித்தார்.
இவரைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் சேவியர் கூறுகையில், "ஆனைமலை புலிகள் காப்பகத்தில், விரைவில் மலைவாழ் மக்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி, சாலை வசதி, மின் வசதி செய்து தர ரூ.32 கோடி தமிழ்நாடு அரசிடம் நிதி வேண்டி கோப்புகள் தரப்பட்டுள்ளன" என்றார்.
இந்த ஆலேசனைக் கூட்டத்தில் வனத் துறை அலுவலர் செல்வம், வனச்சரகர்கள் சக்திவேல், காசிலிங்கம், செந்தில்குமார், நவீன், நடராஜ், வட்டாட்சியர் வெங்கடாசலம், வருவாய்த் துறையினர், மலைவாழ் மக்கள் கலந்துகொண்டனர்.
மலைவாழ் மக்களுக்கு அனுபவ நில வீட்டுமனை பட்டா வழங்கும் ஆலோசனை கூட்டம் - மலைவாழ் மக்கள்
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் மலைவாழ் மக்களுக்கு அனுபவ நில வீட்டுமனை பட்டா வழங்க ஆலேசனைக் கூட்டம் நடைபெற்றது.