கோயம்புத்தூர்: அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்கமளிக்கும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உடன் 'காபி வித் கலெக்டர்' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (மார்ச் 19) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஆட்சியரிடம் கலந்துரையாடினர்.
இதைத்தொடர்ந்து ஆட்சியர், மாணவர்களுடன் பேருந்து மூலமாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு சென்று அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்றனர். அங்கு சிறிதுநேரம் கலந்துரையாடி மாணவர்களுடன் சேர்ந்து மதிய உணவு அருந்தினார்.
இதுகுறித்து ஆட்சியர் சமீரன் கூறுகையில், "இனி வாரந்தோறும் இந்த நிகழ்ச்சி நடைபெறும். மாணவர்களிடையே இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோவையின் முக்கிய இடங்களுக்கு அழைத்து சென்று மாணவர்களுக்கு ஊக்கமளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்