கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக ஐந்து ஒன்றியங்களுக்கும் இரண்டாம்கட்டமாக ஏழு ஒன்றியங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. கோவை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெறவுள்ளது.
முதல்கட்டமாக மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வடக்கு பொள்ளாச்சி, தெற்கு ஆனைமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 27ஆம் தேதி முதல்கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
காரமடை, அன்னூர், சர்க்கார் சாமகுளம், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், சுல்தான்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் இரண்டாம்கட்டமாக 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் இன்று முதல் வழங்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய கட்சிகளின் அலுவலகங்களில் விருப்ப மனுக்களை ஆர்வமுடன் பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலை திமுக நடத்த விடாது - ஜி.கே.வாசன்