ETV Bharat / state

2வது முறையாக மொனாக்கோ எரிசக்தி படகுப் போட்டியில் கோவை மாணவர்கள்

மொனாக்கோ நாட்டின் சர்வதேச எரிசக்தி படகுப் போட்டியில், 2வது முறையாக கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.

author img

By

Published : Apr 28, 2023, 6:49 PM IST

2வது முறையாக மொனாக்கோ எரிசக்தி படகு போட்டியில் கோவை மாணவர்கள்

மொனாக்கோ நாட்டின் சர்வதேச எரிசக்தி படகு போட்டியில், 2வது முறையாக கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்

கோயம்புத்தூர்: ஐரோப்பா கண்டத்தில், சர்வதேச எரிசக்தி படகுப் போட்டியில் பேட்டரி, சோலார் மற்றும் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகை உருவாக்கி, கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர். ஒரு நாட்டில் ஒரு குழுவினருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கும் ஐரோப்பா கண்டத்தின் மொனாக்கோ நாட்டில் நடக்கும் சர்வதேச எரிசக்தி படகு போட்டிக்கு, கோவையைச் சேர்ந்த குமரகுரு கல்லூரி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் இருக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களை, வழக்கமான எரி சக்தியைப் பயன்படுத்தாமல் பேட்டரி மற்றும் சோலார் போன்ற மாற்று எரிசக்தி மூலம் இயங்கும் படகுகளை உருவாக்க மொனாக்கோ நாட்டு அரசு ஊக்குவித்து, ஆண்டுதோறும் சர்வதேச ஆற்றல் படகுப் போட்டி நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு வருகிற ஜூலை 3ஆம் நாளில் இருந்து 8ஆம் தேதி வரை படகுப் போட்டிகள் நடைபெறுகிறது.

ஒரு நாட்டில் ஒரு குழுவினருக்கு மட்டுமே இந்த வாய்ப்பை வழங்கி வரும் மொனாக்கோ நாட்டு அரசு, பல்வேறு விதிமுறைகள் அடிப்படையில் இந்தியா சார்பில் பங்கேற்க தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குமரகுரு கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு வாய்ப்பினை வழங்கி உள்ளது.

‘டீம் ஸிசக்தி’ என்ற பெயரில் யாழி 2.0 எனும் 280 கிலோ எடை கொண்ட படகினை, கரிம நார் மூலம் உருவாக்கப்பட்டு முற்றிலும் சோலார், பேட்டரி மற்றும் ஹைட்ரஜன் பியூல் மூலம் இயங்கக் கூடிய படகை பொறியியல் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அறிமுகப்படுத்தினர்.

கடந்த ஆண்டு பேட்டரி மற்றும் சோலார் மூலம் படகை உருவாக்கி இந்தியா சார்பில் முதல் முறையாக பங்கேற்ற இவர்கள், இந்த ஆண்டு இந்திய அணி சார்பில் பேட்டரி, சோலார் மற்றும் ஹைட்ரஜன் பியூல் என மூன்றில் இயங்கக் கூடிய படகை உருவாக்கியதன் காரணமாக, இரண்டாவது முறையாகவும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதன் அறிமுக விழாவில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கலந்து கொண்டு, படகின் சிறப்பம்சங்களைக் கேட்டறிந்து, குழுவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Solar Eclipse 2023: நிங்கலூ சூரிய கிரகணம் இன்று.. எந்தெந்த பகுதியில் பார்க்கலாம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.