குறைந்த விலையில் எரிபொருள் சேமிப்பு - அரசுக் கல்லூரி மாணவர்கள் சாதனை - Petrol
கோவை: குறைந்த விலையில் பெட்ரோலை சேமிக்க உதவும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து கோவை அரசினர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் (Smart India Hackathon) பதிப்பு என்ற போட்டிகள் நாடு முழுவதும் 18 மையங்களில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கோவை அரசினர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று எரிபொருள் நிலையங்களில் குறைந்த செலவில் நீராவி சிஸ்டம் அமைப்பது என்ற தலைப்பில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் முதலிடம் பிடித்த கோவை அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், பெட்ரோல் பங்குகளில் எரிபொருட்களை நிரப்பும்போது ஆவியாகும் 10% எரிபொருளைத் தடுக்க தற்போதுள்ள இயந்திரத்தை வாங்க 15 முதல் 16 லட்சம் ரூபாய் வரை ஆகும் என்றும், அதற்கு மாற்றாக முப்பதாயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் தங்களது கண்டுபிடிப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Body:மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் பதிப்பு என்ற பிரிவில் நாடு முழுவதும் 18 மையங்களில் போட்டிகள் நடைபெற்றது அகில இந்திய அளவில் நடைபெற்ற இந்த போட்டிகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோவை அரசினர் பொரியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று எரிபொருள் நிலையங்களில் குறைந்த செலவில் நீராவி சிஸ்டம் அமைப்பது என்ற தலைப்பில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். நான்காம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர்களான அபிதா பாலகுமாரன் பரணி கார்த்திக் ஆகியோர் பங்கேற்ற இந்த போட்டியில் முதலிடம் பிடித்ததால் ஒரு லட்சம் ரூபாய் பரிசும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது இது குறித்து மாணவர்கள் கூறுகையில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் நிரப்பும் போது ஏற்படும் ஆவியாதலை மீண்டும் அதே எரி பொருளாக மாற்றி ஆவியாதலைத் தடுத்து சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் அதே சமயம் பெட்ரோல் வீணாவதை தடுக்கும் விதமாக பெட்ரோல் பம்ப் மாதிரியை கண்டுபிடித்துள்ளதாகவும் இந்த பம்ப் முறையாக மார்க்கெட்டில் வாங்கும்போது 15 முதல் 16 லட்சம் செலவு செய்து வாங்கும் பாம்புக்கு மாற்றாக முப்பதாயிரத்துக்கு குறைந்த விலையில் வாங்கலாம் என்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் போடும்போது 10% வரை ஆவியாவதால் அதனை தங்களுடைய முறையில் வெகுவாக குறைக்க முடியும் என மாணவர்கள் தெரிவித்தனர் மேலும் இந்த அரிய வகை கண்டுபிடிப்பு முக்கிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆதரித்து உள்ளதாகவும் இது தங்களது சாதனைக்கு ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதாகத் மாணவர்கள் தெரிவித்தனர் மேலும் வரும் காலங்களில் பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஈடுபடவுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். குறைந்த செலவில் இந்த மெஷினை தயாரித்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்
Conclusion: