ETV Bharat / state

மண்ணில்லாமல் விவசாயம் - கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆய்வு - மண் இல்லாமல் விவசாயம் செய்ய முடியுமா

மண்ணில்லாமல் விவசாயம் செய்வது குறித்த ஆய்வுகள் விரைவில் முடிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளதாக கோவை வேளாண்பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்
வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்
author img

By

Published : Feb 8, 2022, 6:05 PM IST

கோயம்புத்தூர்: விவசாயம் செய்வதற்கு முக்கியத் தேவை மண். இந்த மண் மாசடைவதால் விளைச்சல் குறைவதுடன் தேவையான அளவு உற்பத்தியும் பெறமுடியவில்லை.

இதனையடுத்து மண் இல்லாமல் அதற்கு மாற்றாக நீரின் மூலமாக விவசாயம் செய்யும் தொழில்நுட்பமான ஹைட்ரோபோனிக் எனும் தொழில்நுட்பத்தை பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கோவை வேளாண்பல்கலைக்கழகத்தில் இந்த ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் மண் இல்லாமலேயே விவசாயம் செய்யும் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. சிறிய அளவில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இதனை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தோட்டக்கலை கல்லூரி முதன்மையர் புகழேந்தி மற்றும் பேராசிரியரும் காய்கறி ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான சொர்ணபிரியா தலைமையில் இது தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “வேளாண் பல்கலைக்கழகத்தில் மண்ணில்லா விவசாயம் தொடர்பாக சிறிய அளவில் உள்ள ஆராய்ச்சியை விரிவுபடுத்தவுள்ளோம். மண் மூலம் விவசாயம் செய்வதால் ஏற்படும் விளைச்சலைவிட இந்த மண்ணில்லா விவசாயம் மூலம் அதிகளவில் விளைச்சலைப் பெறமுடியும். பாதுகாக்கப்பட்ட பகுதியில் விவசாயம் நடைபெறுவதால் பூச்சிகளின் தாக்கம் ஏற்படுவதில்லை.

மண்ணில் ஒரு சில ரசாயனங்கள் சேர்வதால் செடிகளின் வளர்ச்சி மற்றும் சாகுபடி குறையும் நிலையில், நீர் மூலம் விவசாயம் செய்வதால் நீரில் உள்ள அனைத்து சத்துக்களும் வேரில் நேரடியாக சேர்கின்றன. இதன் காரணமாக வேரின் வளர்ச்சி மட்டுமில்லாமல் செடியின் வளர்ச்சியும் நன்கு உள்ளது.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆய்வு

இதுமட்டுமல்லாமல் சாகுபடியும் அதிகமாக செய்ய முடியும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நீர் மாற்றினால் மட்டும் போதும். காய்கறிகள், பழ வகைகள், கீரைகள் இந்த தொழில்நுட்ப முறையில் நன்கு வளர்வதுடன் விளைச்சலும் அதிகமாக உள்ளது.

குறைந்த இடத்தில் அதிகமான செடிகளை வைக்க முடியும். மேலும், குறைந்த அளவில் நீரைக்கொண்டு மண்ணில்லா விவசாயம் இதன் மூலம் வெற்றிகரமாக செய்ய முடியும்’ எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 60 ஆண்டுகளாக வசித்த சென்னையில் தற்போது பாதுகாப்பு இல்லை: வேதனை தெரிவித்த நடிகர் மோகன் சர்மா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.