கடந்த திங்கட்கிழமை முதல் பாஜகவினர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தும், அதை எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புகள், எதிர்க்கட்சிகளைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற தொடர் போராட்டத்தில் தந்தை பெரியாரின் கருத்துகளைக் கூறி பறை இசைத்து போராட்டத்தை நடத்தினர்.
அந்தப் பறை இசைப் பாடல்களில் சாதி, மதத்தைக் கடந்து மனிதம் என்ற ஒரு உலகில் இருக்கும் என்பதுபோல பாடல் வரிகள் அமைந்திருந்தது. இதனால் இந்த குளம் இஸ்லாமியர்களும் அனைவரும் நண்பர்களே என்று கூறும் வகையில் பாஜகவினர் இந்தப் பாடல்களை இசைத்து இருந்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் இருக்கும் எந்தவொரு குடிமகனுக்கும் பாதிப்பை விளைவிக்காது என்றும், ஆனால், அதை எதிர்க்கட்சிகள் புரிந்துகொள்ளாமல் வேண்டுமென்றே இஸ்லாமிய சகோதரர்களை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தி வருவதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர்.