கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெண் யானை ஜெயமால்யாதாவை யானை பாகன் வினில்குமார், உதவியாளர் சிவபிரசாத், ஆகியோர் தாக்கும் காணொலிக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்நிலையில், அவர்கள் இருவர் மீதும் மேட்டுப்பாளையம் வனத் துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழ்நாடு வளர்ப்பு யானை மேலாண்மை மற்றும் பராமரிப்பு விதிகள்கீழ் 2011 (வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 பிரிவு 64 மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 பிரிவு 51இன்கீழ் கைதுசெய்தனர்.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் கோவை விரைவு நீதிமன்ற நீதிபதி சுப்புலட்சுமி முன்பு முன்னிறுத்தி கோபிசெட்டிபாளையம் கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கோயில் யானை ஜெயமால்யாவை திருச்செந்தூர் கோயில் யானை உதவியாளர் சுப்பிரமணியம் என்பவர் கண்காணித்துவருகிறார். முன்னதாக வனத் துறையினரும் வனத் துறை மருத்துவக் குழுவினரும் யானை ஜெயமால்யாவை ஆய்வுசெய்தனர்.
அப்போது, அதன் உடலில் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை எனத் தெரியவந்தது. தொடர்ந்து இந்த யானையை இன்று (பிப். 22) வனத் துறையினர், மருத்துவக் குழுவினர் பரிசோதிக்க உள்ளனர்.
இதையும் படிங்க: சிறப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் யானை!