கோவை அடுத்த வால்பாறை பகுதியில் உள்ள ஐயர்பாடி எஸ்டேட்டில் தோட்ட மேலாளராக வேலை செய்பவர் சுப்பிரமணி(56). இவர் நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்ப தேயிலை தோட்டம் வழியாக வந்த பொழுது கரடி ஒன்று அவரை தாக்கி கொன்றது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். இந்நிலையில், எஸ்டேட் பகுதியில் வன விலங்குகள் அதிகளவில் உள்ளது, அவை பொது மக்களை தாக்கியதில் பலர் உயிரிழந்துள்ளதால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரடி தாக்கி இறந்தவர் சடலத்தை உடற்கூறாய்விற்கு எடுத்து செல்ல அனுமதிக்காமல், வன விலங்குகளமிடருந்து பொது மக்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தினர்.